மும்பை:மகாராஷ்டிர மாநில புதிய முதலமைச்சராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே இன்று (ஜூன் 30) மாலை பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் வேண்டுகோளின் பேரில் ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் இணைந்ததாக குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர அரசியலில் நடந்தது என்ன?
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிர அரசியலில் நெருக்கடி நிலை நீடித்து வந்தது. அப்போது ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சி முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக அதிருப்தி தெரிவித்து, அக்கட்சி மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி விடுதியில் முகாமிட்டு இருந்தனர். ஷிண்டேவுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு அதிகரித்ததால், உத்தவ் தாக்கரே கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அம்மாநில ஆளுநர், உத்தவ் தாக்கரே அரசினை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டபோதிலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை எனத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, உத்தவ் தாக்கரே நேற்று (ஜூன் 29) முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும், எம்.எல்.சி பொறுப்பிலிருந்தும் விலகப்போவதாகவும் அறிவித்தார். பின்னர் இன்று (ஜூன் 30) அதிருப்தி சிவசேனாவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக மாநிலத்தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருவரும் சந்தித்துப் பேசி, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
முதலமைச்சர் பதவியில் திடீர் திருப்பம்