தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்தது பசுமை தீர்ப்பாயம் - explosion in firecracker factory in satthur

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விசாரணை செய்ய எட்டு பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது.

National Green Tribunal
National Green Tribunal

By

Published : Feb 18, 2021, 9:55 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த 12ஆம் தேதி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் வேல்ராஜ் ஆகியோரை காவல்துறை இன்று (பிப்.18) கைது செய்தது.

இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள எட்டு பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று(பிப்.18) அமைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளை பார்த்த பின்னர் தாமாகவே முன்வந்து இந்த விசாரணை குழுவை நியமிப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான தீர்பாய அமார்வு, இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், பட்டாசு ஆலை உரிமையாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த குழு சம்பவயிட்டதிற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிரமிப்பில் மகாராஷ்டிரா மக்கள்; ஹெலிகாப்டரை விலைக்கு வாங்கிய விவசாயி, பதவியேற்க வந்த கிராம தலைவர்

ABOUT THE AUTHOR

...view details