தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண் உள்ளிட்ட 3 பேரை தாக்கிய 8 பேர் கைது - thane

மும்பை தானே மாவட்டத்தில் பெண் உள்ளிட்ட 3 பேரை தாக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

eight-arrested-after-auto-driver-assaults-woman-thrashes-her-friends
மும்பை: பெண் உள்ளிட்ட மூவர் மீது தாக்குதல் நடத்திய 11 பேர் கைது

By

Published : Jul 4, 2021, 10:08 AM IST

மும்பை: தானே மாவட்டத்தில் நேற்றிரவு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு பெண் ஒருவர் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அந்தப்பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்துள்ளார். இதனால், பாதுகாப்புக்காக தனது இருப்பிட விவரத்தை தனது இரண்டு ஆண் நண்பர்களுக்கு அந்தப் பெண் பகிர்ந்துள்ளார்.

இருப்பிட விவரத்தை பெற்ற இருவரும், அப்பெண் இருக்கும் இடத்தை சென்றடைந்தனர். அங்கு, பெண்ணின் ஆண் நண்பர்கள் இருவருக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அம்மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மும்பை: பெண் உள்ளிட்ட மூவர் மீது தாக்குதல் நடத்திய 8 பேர் கைது

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:கார் மீது லாரி மோதல் - 3 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details