தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்! - அமலாக்கத்துறை செய்திகள்

ED summons Jharkhand CM Hemant Soren: நில மோசடி வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வருகிற 24ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 19, 2023, 9:21 PM IST

ராஞ்சி (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி வழக்கு உள்ளது. எனவே, வருகிற 24ஆம் தேதி ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை வட்டாரம் தெரிவித்து உள்ளது.

இது, இந்த மாதத்தில் மட்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு அனுப்பப்படும் இரண்டாவது சம்மன் ஆகும். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 அன்று அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு ஹேமந்த் சோரன் (Hemant Soren) எழுதிய கடிதத்தில், “நான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளேன். ஆகஸ்ட் 15 அன்று மாநிலத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி எனக்கு உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்பு கேள்விக்குறி!

ஆகஸ்ட் 14 ஒரு முக்கியமான நாள். ஒரு முதலமைச்சராக எனக்கு பல திட்டங்கள் அன்றைய நாளில் உள்ளன. ஆகஸ்ட் 14 அன்று ஆஜராகுமாறு எனக்கு அனுப்பப்பட்ட சம்மனால் என்னை மட்டும் களங்கப்படுத்தவில்லை. ஜார்க்கண்ட் அரசை தேர்ந்தெடுக்கப்பட்டதையும் களங்கப்படுத்தி உள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக நான் கருத்து கூறுவதால், மத்திய அமைப்புகளை வைத்து நான் குறி வைக்கப்படுகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பாக இன்று காலை முதல் கட்சி பிரமுகர்கள் உடன் ஹேமந்த் சோரன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில கோதா மக்களவை பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே (Nishikant Dubey) வெளியிட்டு உள்ள ‘X' பதிவில், “ஆகஸ்ட் 24 அன்று ராஜா சாஹேப் (ஹேமந்த் சோரன்)-ஐ அமலாக்கத்துறை தேநீருக்கு அழைத்து உள்ளது” என பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் உத்யோக் ரத்னா விருது - ரத்தன் டாடாவிற்கு வழங்கி கவுரவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details