தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நேஷனல் ஹெரால்டு வழக்கு - ஜூலை 21ஆம் தேதி ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

By

Published : Jul 11, 2022, 8:31 PM IST

Cong
Cong

டெல்லி:நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துகள், யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது. யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி., ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை மத்திய அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் ராகுல்காந்தியிடம் மூன்று நாட்களில், சுமார் 50 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

சோனியா காந்திக்கும் கடந்த மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சோனியா காந்தி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்று - காங்கிரஸ் அறிக்கை!

ABOUT THE AUTHOR

...view details