தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெயர் - இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜாக்குலின்

மிரட்டிப் பண மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பெயரையும் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளனர்.

Etv Bharatஅமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெயர்
Etv Bharatஅமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெயர்

By

Published : Aug 17, 2022, 5:04 PM IST

டெல்லி: பல கோடி பணத்தை மிரட்டி பெற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் சந்தேகிக்கப்பட்டார். இதனையடுத்து தற்போது இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஜாக்குலினின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) நீதிமன்றத்தில் இன்று(ஆகஸ்ட் 17) இந்த வழக்கிற்கான புதிய குற்றப்பத்திரிகையை மத்திய புலனாய்வு நிறுவனம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதில் நடிகர் முக்கிய குற்றவாளியாக ஜாக்குலின் பெயரும் உள்ளது எனவும், இந்த வழக்கு சம்பந்தமாக நடிகையிடம் பல முறை ஏஜென்சியால் விசாரணை நடத்தப்பட்டது என அமலாக்கத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக இறுதியாக ஜூன் மாதம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜாக்குலின், கடந்த 2009இல் இந்தித் திரையுலகில் அறிமுகமானார். சுகேஷ் சந்திரசேகரை மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களின் மூலம் கிடைத்த பணத்தில் ரூ.5.71 கோடி மதிப்பிலான பல்வேறு பரிசுகளை, ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு வழங்கியுள்ளார் என்று அமலாக்கத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஹவாலா ஆபரேட்டரான அவ்தார் சிங் கோச்சார் மூலம் இந்தப் பண மோசடியில் வந்த வருமானத்தில் இருந்து, ஜாக்குலின் சார்பாக ஸ்கிரிப்ட் எழுத்தாளர் ஒருவருக்கு அவரது வெப் சீரிஸ் திட்டத்தில் ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு முன்பணமாக 15 லட்சம் ரூபாய் பணத்தை சந்திரசேகர் கொடுத்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் புரமோட்டர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உள்ளிட்ட உயர்மட்ட நபர்களை ஏமாற்றி கிடைத்த சட்டவிரோதப்பணத்தை பெர்னாண்டஸுக்குப் பரிசுகளை வாங்க சந்திரசேகர் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க:நடிகை ஜாக்குலின் சொத்துக்கள் முடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details