ராணுவ நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக ஜார்க்கண்டில் 8 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் 4 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த அமித் அகர்வால், பாரியாடு பகுதியில் உள்ள 50 ஏக்கர் ராணுவ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளதாக, அமலாக்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.