தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பண மோசடி வழக்கு: சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக்கின் நெருங்கிய உதவியாளர் கைது! - டாப்ஸ் குழுமத்திற்கும் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக்கிற்கும் தொடர்பு

மும்பை: பண மோசடி வழக்கில் சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான அமித் சந்தோலை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.

மும்பை
மும்பை

By

Published : Nov 26, 2020, 1:42 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இயங்கும் தனியார் நிறுவனமான டாப்ஸ் குழுமத்திற்கும் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக்கிற்கும் இடையில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக அமலாக்க இயக்குநரகத்துக்கு ரகசிய ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து, கடந்த நவம்பர் 24ஆம் தேதி மும்பை மற்றும் தானேவில் அலமாக்க இயக்குநரகம் சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

விசாரணையில், பண மோசடி வழக்கில் டாப் செக்யூரிட்டீஸ் குழுமத்தின் விளம்பரதாரரான அமித் சந்தோலுக்கு தொடர்பு இருப்பது உறுதியானதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக்கின் நெருங்கிய உதவியாளர் ஆவர். இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பாஜக பிரமுகர் கிரிட் சோமையா, டாப் செக்யூரிட்டீஸ் குழுமத்தின் பண மோசடியை வெளிக்கொண்டு வருவதற்காக மும்பை கேட் காவல் நிலையத்திற்கு செல்கிறேன்" என ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details