தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பதற்றமான வாக்குச்சாவடிகளில்... வெப்காஸ்டிங் முறை அமல்!

டெல்லி: பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு, இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெப்காஸ்டிங்
வாக்குச்சாவடி

By

Published : Feb 26, 2021, 10:41 PM IST

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐந்து மாநிலங்களிலும் முக்கியமான வாக்குச் சாவடிகளிலும், பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் நடைபெறவும் வாக்குப்பதிவு இணையத்தில் நேரலையாக ஒளிப்பரப்பப்படும் என தேர்தல் ஆணையம் அறவிப்பு வெளியிட்டுள்ளது.

குறைந்தப்பட்சம் 50 விழுக்காடு வாக்குச் சாவடிகளில் இணையத்தில் நேரலையாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளில் வெப்காஸ்டிங் முறை அமலுக்கு வருவதால், தேர்தல் நியாமான முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கை வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details