தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிவர் புயல் எதிரொலி: பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி வருகை - echo nivar storm

புதுச்சேரி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அரக்கோணத்தில் இருந்து 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் புதுச்சேரிக்கு வந்தனர்.

நிவர் புயல் எதிரொலி
நிவர் புயல் எதிரொலி

By

Published : Nov 24, 2020, 10:30 AM IST

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் இன்று (நவ.24) மாலை தீவிர புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாகக் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயலால் புதுச்சேரி கடல் வழக்கத்துக்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அத்துடன் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைக்கு வரவழைக்கப்பட்டதால் படகுகள், விசைப்படகுகள் அனைத்தும் கரையில் அணிவகுத்து நிற்கின்றன. இன்று அதிகாலை முதலே புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி வருகை

அதேபோல் புயலை எதிர்கொள்ள மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்ட நிலையில்,புயல் காரணமாக புதுச்சேரியில் மறு உத்தரவு வரும்வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க:நெருங்கும் ’நிவர்’ புயல் - தற்போதைய நிலை என்ன?

ABOUT THE AUTHOR

...view details