சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் அதிமுக அரசையும் மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். அப்போது, பாஜக மூத்த தலைவர்களான அருண் ஜெட்லியும், சுஷ்மா சுவராஜும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் மனம் நொந்து இறந்ததாக அவர் பேசியிருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! - மோடி
முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லியும், சுஷ்மா சுவராஜும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் உயிரிழந்ததாக பேசியது குறித்து விளக்கமளிக்க திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
uthaya
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மரணம் குறித்த தனது பேச்சு குறித்து, உதயநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது' - சத்யபிரதா சாகு