டெல்லி: துணை குடியரசு தலைவர் தேர்தல் நேற்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இரு அவைகளிலும் மொத்தமாக 780 எம்.பிக்கள் உள்ள நிலையில், அதில் 725 பேர் வாக்களித்தனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். கடந்த ஆறு முறை நடந்த துணை குடியரசு தலைவர் தேர்தல்களில் இல்லாத அளவுக்கு, சுமார் 74 சதவீத வாக்குகளை தன்கர் பெற்றுள்ளார்.