தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை

தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் உள்ள 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

By

Published : Sep 13, 2022, 8:13 PM IST

Etv Bharat தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை
Etv Bharat தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை

டெல்லி:இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு, பிகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அல்லது நோட்டீசுக்கு பதில் அளிக்காதது, 2014, 2019 ஆண்டுகளில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எதிலும் போட்டியிடாதது ஆகிய காரணங்களால் இவை செயல்படாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த 253 கட்சிகளில் 66 கட்சிகள் தேர்தல் சின்னங்கள் ஆணை 1968ன்படி பொது சின்னங்களுக்காக விண்ணப்பித்திருந்த போதும் சம்பந்தப்பட்ட தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான சட்டத்தின் விதி 13 உட்பிரிவு (ii) (இ) வழிகாட்டுதல்படி, ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அது பதிவு செய்த கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அதன்படி, ஏற்கனவே 86 கட்சிகளின் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் சின்னங்கள் ஆணைபடியான பயன்களும் இவற்றுக்கு அளிக்கப்படவில்லை. மேலும், 853 கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29 ‘ஏ’ படி, இவற்றை செயல்படாத கட்சிகள் என்று மாநில தேர்தல் ஆணையங்கள் பதிவு செய்துள்ளன.

இதனால் இவை தேர்தல் சின்ன ஒதுக்கீட்டு ஆணையின் பயனை பெற இயலாது. ஏதாவது ஒரு கட்சிக்கு இதன் மீது மாறுபட்ட கருத்து இருப்பின், 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் ஆணையத்தை உரிய ஆதாரங்களுடன் அணுகலாம். ஆண்டு வாரியாக தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், நிதி பெற்றதற்கான அறிக்கை, செலவின அறிக்கை, வங்கிக் கணக்கு உட்பட நிதி பரிவர்த்தனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்கள் உட்பட தற்போதைய நிர்வாகிகள் ஆகிய விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத இந்த 253 கட்சிகளில் பொதுச் சின்னம் கோரி, தேர்தலில் போட்டியிடாத 63 கட்சிகள் விளக்கத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும். இதுதொடர்பான 253 கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயர் - தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details