வரப்போகும் இடைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியின் பெயரையோ அதன் சின்னத்தையோ யாரும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் இன்று (அக். 2) உத்தரவிட்டுள்ளது. லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனத் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப்பின் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது.
அவரது மகன் சிரக் பாஸ்வானுக்கும், சிரக் பாஸ்வானின் சித்தப்பா பசுபதி குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கட்சி இரு தரப்பாக பிரிந்தது. 2020ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி படுதோல்வியடைந்தது.
இதற்கு சிரக் பாஸ்வானின் மோசமான செயல்பாடுகளே காரணம் எனக் குற்றஞ்சாட்டி பசுபதி குமார் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் பலர் பசுபதி குமார் பக்கம் சாய்ந்ததால் கட்சி பிளவுபட்டது.
பிகாரில் இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், லோக் ஜன சக்தி சின்னத்தையும் பெயரையும் யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும், தேர்தல் ஆணையம் தருகிற சின்னத்தில் ஏதேனும் ஒன்றை இரு தரப்பும் பயன்படுத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:விமர்சனங்களை பெரிதும் மதிப்பவன் நான் - பிரதமர் மோடி