தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமெரிக்கா சென்றார் வெளியுறவுத் துறை அமைச்சர்! - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அமெரிக்கா சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கரோனா தொற்று பரவல் குறித்து ஐ.நா. பொது செயலாளரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

Jaishankar
அமைச்சர் ஜெய்சங்கர்

By

Published : May 24, 2021, 2:59 PM IST

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐந்து நாள்கள் சுற்றுப் பயணமாக இன்று(மே.24) அமெரிக்கா சென்றுள்ளார். மே 28 ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸைச் சந்தித்து பேசவுள்ளார்.

இந்தச் சுற்றுப் பயணத்தின் போது, கரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார் எனவும், இந்தியாவில் தடையின்றி தடுப்பூசி கிடைப்பதற்காக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், அமைச்சகம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details