தேஜ்பூர் (அசாம்):அசாம் மாநிலத்தின் தேஜ்பூர் பகுதியின் பரிகாசுரி வட்டத்தைச் சேர்ந்த மஸ்குல் கான் என்ற மாணவர் உருவாக்கியுள்ள இ-பைக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மாணவர் உருவாக்கியுள்ள இ-பைக் மூலம் வெறும் 8 ரூபாய் செலவில் 30 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் என்பது தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயமாக உள்ளது.
மாணவர் இந்த இ-பைக்கை சாலையில் ஓட்டிச் செல்லும் போது அனைவரும் வியப்புடன் பார்ப்பதால் இந்த இ-பைக்கிற்கு WONDER BIKE 250 என மாணவர் பெயரிட்டுள்ளார். கரோனா தொற்று காலத்தில் லாக்டவுனில் வீட்டில் இருக்கும் போது மாணவர் மஸ்குல் கால் இ-சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் பெற்ற அனுபவத்தின் மூலம் தற்போது இந்த இ-பைக்கை மஸ்குல் கான் உருவாக்கியுள்ளார்.