ரேவாரி:ஹரியானா மாநிலம் மோட்டி சோவாக் நகரத்தில் அசோக் குமார் என்பவர் ‘ஷ்யாம் கார்மெண்ட்ஸ்’ என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று வழக்கம்போல் அசோக் குமார் தனது கடையில் அமர்ந்திருந்து உள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருவர் வந்து உள்ளனர். அவர்கள், திடீரென அசோக் குமாரை துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளனர்.
அப்போது, அசோக் குமாரின் கடையில் இருந்த விலை உயர்ந்த நான்கு ஜோடி ஷூக்களை அவர்கள் கொள்ளை அடித்து உள்ளனர். பின்னர், இருவரும் அங்கு இருந்து தப்பிச் சென்று உள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட ஷூவின் மதிப்பு 8 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனையடுத்து இது தொடர்பாக அசோக் குமார் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் அடுத்த சில மணி நேரங்களிலேயே காவல் துறையினர் பிடித்து உள்ளனர்.
இதையும் படிங்க:11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றதாக கூறிய போலீஸ் - நீதிமன்றம் அதிருப்தி!
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளை அடித்துச் சென்றவர்கள் மொஹல்லா பஞ்சர்வாடா பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற தீபு என்ற பல்லு என்ற பல்வான் மற்றும் காளி என்ற காளியா என்பது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக இருவர் மீதும் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ரேவாரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூலை 4), மாவட்ட கூடுதல் மற்றும் செஷன் நீதிபதி முனைவர் சுசீல் குமார் கார்க் தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்த தீர்ப்பின்படி, ‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபக் என்ற தீபு மற்றும் காளி என்ற காளியா ஆகிய இருவரும் 8 ஆயிரம் மதிப்பு உள்ள நான்கு ஜோடி ஷூக்களை கொள்ளை அடித்துச் சென்றது காவல் துறையினரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும், விலை உயர்ந்த ஷூக்களை திருடிய வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டிருப்பது ரேவாரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:திருட்டு செல்போன்களை விற்க வந்த திருடன்.. சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்!