தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கனமழையால் சரிந்த வீடு - ஏழு பேர் மரணம் - பெலகாவியில் விபத்து

கனமழைக் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வீடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

கனமழையால் சரிந்த வீடு
கனமழையால் சரிந்த வீடு

By

Published : Oct 6, 2021, 9:51 PM IST

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், அங்குள்ள பதலா அன்கலாகி என்ற கிராமத்தில் இன்று மாலை வீடு இடிந்து விழுந்தது.

இதில் வீட்டிலிருந்த ஐந்து பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். உயிரிழந்தவர்களில் மூவர் சிறார்கள் எனக் கூறப்படுகிறது. சம்பவயிடத்திற்கு வந்த மாவட்ட நிர்வாகம் பாதிப்பு குறித்து ஆய்வு செய்துவருகிறது.

இதையும் படிங்க:7 மெகா ஜவுளி பூங்காக்கள், 21 லட்சம் வேலைவாய்ப்பு - புதிய திட்டம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details