மத்தியபிரதேசம்: மத்தியபிரதேச மாநிலம், ஷாதோல்(Shahdol) பகுதியில் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இன்று(ஏப்.19) இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரண்டு ரயில்களின் எஞ்சின்களும் தீப்பற்றி எரிந்தன. இதனால் ரயில் பெட்டிகளும் தீப்பற்றி எரியத் தொடங்கின.
இந்த கோர விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்ததாக தெரிகிறது. ரயில்வே ஊழியர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.