தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2-டிஜி மருந்து: தொழில் நுட்பத்தைப் பகிரும் டி.ஆர்.டி.ஓ - இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு

2-டிஜி கரோனா தடுப்பு மருந்தின் தொழில் நுட்பத்தை பகிர, டி.ஆர்.டி.ஓ அமைப்பு முன் வந்துள்ளது.

DRDO
டி.ஆர்.டி.ஓ

By

Published : Jun 10, 2021, 11:56 AM IST

டெல்லி: நாடு முழுவதும் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) ஆய்வகம் 2-DG எனும் மருந்தை உருவாக்கியுள்ளது. தண்ணீரில் கலந்து குடிக்கும் இந்த மருந்தினை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

இந்த மருந்தை டாக்டர் ரெட்டி’ஸ் ஆய்வகம் தயாரித்து வருகிறது. விரைவில், இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-டிஜி கரோனா தடுப்பு மருந்து

இந்தியாவில் இந்த மருந்தினை பல நிறுவனங்கள் தயாரிப்பதற்கு ஏதுவாக தொழில் நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ள டிஆர்டிஓ முடிவு செய்துள்ளது. விருப்பம் தெரிவிப்பவர்களில், மொத்தமாக 15 இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே தொழில் நுட்பத்தை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

இந்த மருந்து, கரோனா நோயாளிகள் விரைவாகக் குணமடையவும், மருத்துவ ஆக்ஸிஜன் தேவையைக் குறைக்கவும் உதவும் என கிளினிக்கல் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் விருப்பமுள்ள இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், வரும் 17-ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details