ஒடிசா: பாலசோர் மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஒருங்கிணைந்த சோதனை மையத்தைப் பணியாற்றி ஐந்து ஊழியர்களை செப்டம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானிய உளவாளிக்குப் பணத்திற்காக முக்கியத் தகவல்களைத் தெரிவித்ததாகக் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து, உளவு பார்த்த வழக்கில் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, ஐந்து பேரையும் குற்றப்பிரிவு காவல் துறையினர் ஏழு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை சனிக்கிழமை (செப். 25) முடிவடைந்த நிலையில் அவர்கள் தற்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளனர். இது குறித்து குற்றப்பிரிவு கூடுதல் இயக்குநர் சஞ்ஜீப் பாண்டா கூறியதாவது, “குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருடனும், பாலசோரைச் சேர்ந்தவர் எனக் கூறி பொய்யாக ஒரு பெண் பேசிவந்துள்ளார்.
கணொலி வாயிலாகப் பேசிய பெண்
ஒருவருக்கொருவர் தெரியாமல், பேசியுள்ளார். அவர் ஏழு ஃபேஸ்புக் கணக்குகளை வெவ்வேறு பெயர்களில் பயன்படுத்திவந்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரிடம் அப்பெண் அடிக்கடி காணொலி வாயிலாகப் பேசிவந்துள்ளார்.