புதுச்சேரி:காரைக்கால் அருகே காமராஜர் வளாகத்தில் விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு 4,448 விவசாயிகளுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான காசோலையினை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசின் இந்திய உணவுக் கழகம் (FCI) மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும். விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகை பெற்றுத் தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.