பாகல்கோட் (கர்நாடகா): கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டில் உள்ள ஹனகல் ஸ்ரீ குமரேஷ்வர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகிய காரணங்களால் அனுமதிக்கப்பட்ட அவரை, மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக அவர் நாணயங்களை விழுங்கி வந்துள்ளதாகவும், அதனாலேயே அவருக்கு வாந்தி மற்றும் வயிற்று உபாதைகள் வந்துள்ளது எனவும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.