ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குடிமல்காபூரைச் சேர்ந்த மகேந்தர் சிங் என்ற இளைஞர் சிறுவயதிலிருந்தே உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தார். ஆட்டுக்காண்டுஅவரது எடை கூடிக்கொண்டே போனதால் பல்வேறு உடல் நலப் பாதிப்புகளும் ஏற்படத் தொடங்கின. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது எடை சுமார் 240 கிலோவாக இருந்தது.
அவரது உடல் எடையை குறைக்க, பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி ஒரு தனியார் மருத்துவமனையை அணுகியபோது, உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைக்கு சுமார் 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர். அந்த அறுவை சிகிச்சைக்குப் பணம் இல்லாததால், மகேந்தர் சிங்கின் பெற்றோர் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவமனையான உஸ்மானியா மருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு இளைஞரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழு, அவருக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி இரண்டு மாதங்களுக்கு முன்பு மகேந்தர் சிங்கிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் ஒரு வகையான இரப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சை நாம் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்தும், செரிமான முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.