தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீங்கள் சமூக வலைதளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவரா - வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமா? - பரிசு

சமூக ஊடக பிரபலங்கள், சிலர் தாங்கள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் புகைப்படங்களை வெளியிட்டு இருந்த நிலையில், வருமானவரித் துறை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்தில் அவர்கள் சிக்கி உள்ளனர்.

நீங்கள் சமூக வலைதளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவரா - வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமா?
நீங்கள் சமூக வலைதளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவரா - வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமா?

By

Published : Jul 31, 2023, 11:36 AM IST

Updated : Jul 31, 2023, 11:59 AM IST

டெல்லி: நீங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமான நபரா? யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் லிங்க்ட்இன் போன்ற சமூக ஊடகங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆதரிப்பதன் மூலம் நீங்கள் வருமானம் ஈட்டுகிறீர்களா? ஆம் என்றால், இந்த வருமானத்தை நீங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் மற்றும் அதற்கு உரிய வருமான வரியை நீங்கள் செலுத்தியாக வேண்டும்.

கடந்த நிதியாண்டில் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் நீங்கள் ஈட்டி இருந்தால், ஜூலை 31 அல்லது அதற்கு முன்பாக, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. வருமான வரிச் சட்டம், ஐந்து ஆதாரங்களில் இருந்து வருமான வரியை கணக்கிடுகிறது.

சம்பளம், வணிகம் அல்லது தொழிலில் இருந்து கிடைக்கும் லாபம் மற்றும் ஆதாயங்கள், ரியல் எஸ்டேட் மூலம் கிடைக்கும் வருமானம், வாடகை வருமானம், மூலதன ஆதாயங்கள் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் உள்ளிட்டவைகளில் இருந்து வருமான வரி கணக்கிடப்படுகிறது.

ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வரி விலக்கு வரம்புக்கு மேல் வருமானம் இருந்தால், அந்த குறிப்பிட்ட நிதியாண்டிற்கான தொடர்புடைய அடுக்குக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதத்தின்படி அவர் வருமான வரி செலுத்த வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள நபர், தனது சம்பளம் அல்லது லாபம் மற்றும் வணிகம் அல்லது தொழிலின் ஆதாயங்களுக்கு ஏற்கனவே வருமான வரி செலுத்தி இருந்த போதிலும், சமூக ஊடகங்களின் மூலம், அவர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்தியாக வேண்டும்.

வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் உத்தரபிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள நபர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையில், இவர்களிடம் அறிவிக்கப்படாத வருமானம் இருந்ததையும், அவர்கள் அதுகுறித்த தகவலை வெளியிடாததைக் கண்டறிந்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில், பிரபல யூடியூபரிடம் மேற்கொள்ளப்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரது வீட்டில் இருந்து ஏராளமான பணத்தை மீட்டு உள்ளனர். தரவு பகுப்பாய்வு அவர்களின் வருமானத்தை குறைவாக மதிப்பிட்டு அறிக்கை வெளியிடுவதால், சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மற்றும் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடக நிறுவனங்கள் அவர்களுக்குச் செலுத்திய தொகையில் TDS கழித்ததால், இந்த சமூக ஊடக பிரபலங்கள் குறித்த தகவல்களை, வருமானவரித்துறை அதிகாரிகள் ஆராய துவங்கினர். சில சமூக ஊடக பிரபலங்கள், தாங்கள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் புகைப்படங்களை வெளியிட்ட்டு இருந்தனர். இதனை அடையாளம் கண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அவர்களின் வருமான வரி வருமானம், வெளிநாட்டு மூலங்களிலிருந்து வரும் வருமானத்தை பிரதிபலிக்கவில்லை என்பதை கண்டறிந்தனர்.

சமூக ஊடகங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

சமூக ஊடகங்களை கையாளுதல், ஆன்லைன் பட்டறைகள் அல்லது ஒப்புதல்கள் ஆகியவற்றிலிருந்து வரும் வருமானம், மேற்குறிப்பிட்ட முதல் நான்கு வகைகளில் சேராது. இவைகள், 'பிற ஆதாரங்களில்' இருந்து வரும் வருமானமாக வகைப்படுத்தப்படுகிறது. சமூக ஊடக ஒப்புதல்கள் மூலம் கிடைக்கும் வருமானம் பரிசுகள் அல்லது தயாரிப்புகள் மூலம் வருமானம் செலுத்தப்பட்டு இருந்ததால்,, அதனை வருமான வரித்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிந்தது, ஏனெனில் வருமான வரித் துறை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 20,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசுகளுக்கு 10 சதவீதம் TDS விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில், 1961 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவில் 194R என்ற புதிய பிரிவை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. புதிதாக அறிமுகப்படுத்த்ப்பட்ட இந்த பிரிவில், இந்தியருக்கு 20,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசு அல்லது பலனை, தனி நபரோ அல்லது நிறுவனமோ வழங்கினால், அதற்கு TDS பிடித்தம் செய்யப்பட வேண்டும். . எனவே, சமூக ஊடக ஒப்புதலின் மூலம் கிடைக்கும் வருமானம் அன்பளிப்பு அல்லது வேறு சில நன்மைகள் பெறப்பட்டிருந்தாலும், வருமான வரித்துறை அதிகாரிகளால் அதைக் கண்டறிய முடிந்தது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஆர்பிஎப்(RPF) வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர், 3 பயணிகள் பலி!

Last Updated : Jul 31, 2023, 11:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details