தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் காலி செய்ய வேண்டும் - சுப்பிரமணியன்சுவாமிக்கு நீதிமன்றம் உத்தரவு! - சுப்பிரமணியசாமி பாதுகாப்பை உறுதி செய்க

பாஜக முன்னாள் எம்.பி சுப்பிரமணியன்சுவாமி, அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் காலி செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Swamy
Swamy

By

Published : Sep 14, 2022, 7:22 PM IST

டெல்லி:பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சுப்பிரமணியன் சுவாமியின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி நிறைவடைந்தது. ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, டெல்லியில் அரசு வழங்கிய பங்களாவிலேயே அவர் இன்னும் தங்கியுள்ளார். அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு தனக்கு அரசு ஒதுக்கீடு செய்த அதே பங்களாவை, மீண்டும் தனக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக்கோரி, சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாவலர்கள் எப்போதும் தன்னுடனே இருப்பதாகவும், அவர்களைத் தங்க வைக்க அந்த பங்களா தேவை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, பதவிக்காலம் முடிந்துவிட்ட பிறகு, Z பிரிவு பாதுகாப்பு இருக்கும் காரணத்தால், அரசு பங்களாவை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

ஆறு வாரங்களில் அரசு பங்களாவை ஒப்படைக்கும்படி சுப்பிரமணியன்சுவாமிக்கு உத்தரவிட்டார். தேவைப்பட்டால் சுப்பிரமணியன்சுவாமிக்கு Z பிரிவு பாதுகாப்பை நீட்டிக்கலாம் என்றும், அதேநேரம் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த 8 எம்எல்ஏக்கள்...கோவாவில் மீண்டும் காங்கிரஸ் பின்னடைவு


ABOUT THE AUTHOR

...view details