தேசிய மாணவர் படையை மறுசீரமைப்பு செய்ய 15 பேர் கொண்ட குழுவை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா தலைமையிலான இக்குழுவில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார்.
1948ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய மாணவர் படை அமைப்பு, பள்ளி, கல்லூரி மாணவர்களை பொது சேவைக்கு தயார் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இதைத் தற்காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா ஆகியோருடன் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் இடம்பிடித்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் ஆலோசகராக தோனி அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ச்சியாக தோனிக்கு இந்த புதுப்பொறுப்பும் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்திய ராணுவம் தோனிக்கு கௌரவ கர்னல் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் விராட்!