தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இனி இங்கு ஸ்விக்கி, சொமேட்டோ தேவையில்லை: வந்துவிட்டது உணவு டெலிவரி செய்யும் ரோபோக்கள்! - ஹைதராபாத்தில் உணவு டெலிவரி ரோபோக்கள்

ஹைதராபாத்தில் அப்பார்ட்மென்ட், அடுக்குமாடி குடியிருப்புகளில் உணவு டெலிவரி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த ரோபோக்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ரோபோக்கள்
ரோபோக்கள்

By

Published : Jun 24, 2022, 5:44 PM IST

ஹைதராபாத்:ஹைதராபாத் மாதபூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் 'எக்ஸ்பிரஸ் டெக்னோ லாஜிஸ்டிக்ஸ்' , 'தீரா' (Dheera) , எனப் பெயரிடப்பட்ட பிரத்யேக உணவு டெலிவரி ரோபோக்களை உருவாக்கி உள்ளன. நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் அப்பார்ட்மென்ட், அடுக்குமாடி குடியிருப்புகளில் உணவு டெலிவரி செய்யப்பட உள்ளன. வரும் ஜூன் 28ஆம் தேதி இந்த ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஸ்விக்கி, சொமேட்டோ உணவு டெலிவரி ஊழியர்கள் அப்பார்ட்மென்ட், அடுக்குமாடி குடியிருப்புகளின் நுழைவு வாயிலில் உணவு பார்சலை ரோபோக்களிடம் ஒப்படைக்கலாம். ரோபோக்கள் உரிய பிளாட்டிற்கு சென்று நேரடியாக வீட்டு வாசலில் உணவு டெலிவரி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

'தீரா' ரோபோ செயல்படும் முறை:இதுகுறித்து எக்ஸ்பிரஸ் டெக்னோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவன சிஇஓ ஸ்ரீநிவாஸ் கூறுகையில்,"முதற்கட்டமாக நரசிங்கி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2 ரோபோக்களுடன் சேவையைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற 28ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

'தீரா' ரோபோ ஒரே நேரத்தில் 16 பார்சல்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டது. டெலிவரி ஊழியர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு பார்சலை ரோபோவிடம் உள்ள பெட்டியில் வைத்து, ரோபோவின் கீ-பேடில் உணவு டெலிவரி செய்யப்பட வேண்டிய பிளாட் எண்ணை குறிப்பிட வேண்டும்.

பின்பு ரோபோ சம்பந்தப்பட்ட பிளாட்டிற்குச் செல்லும். வீட்டு வாசலில் ரோபோ வந்தவுடன் செல்போனுக்கு ஓடிபி (OTP) அனுப்பப்படும். ஓடிபியை ரோபோவிடம் தெரிவித்தப் பின் உணவு டெலிவரி செய்யப்படும். லிஃப்டில் ரோபோ செல்லும் வகையில் பிரத்யேக சிப் அமைக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்புகள், அப்பார்ட்மென்ட்டில் பயன்படுத்தப்படும் வகையில் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், உணவு டெலிவரி ஊழியர்கள் பிளாட்டிற்கு நேரடியாகச் சென்று உணவு டெலிவரி செய்யத் தேவையில்லை. ரோபோ பயன்பாட்டின் மூலம் டெலிவரி கட்டணம் குறையும். முதலில் 2 ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளோம். அதன்பின் அதிக ரோபோக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவை விமானநிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த ரோபோ சேவை

ABOUT THE AUTHOR

...view details