கரோனா சூழல் குறித்து ஆலோசிக்கும் வகையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடா, ஏழை மக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும். நாட்டின் பெரும்பாலான மக்கள் வாங்கும் வகையில் தடுப்பூசியைகுறைந்த விலையில் அளிக்க வேண்டும். நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும். கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டது பாராட்டுக்குரியது.