தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"நாடாளுமன்றத்தை கேலி செய்வதை நிறுத்துங்கள்" - மத்திய அரசு மீது டெரிக் ஓ பிரையன் காட்டம்! - மத்திய அரசு மீது டெரிக் ஓ பிரையன் காட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Derek
Derek

By

Published : Aug 8, 2022, 8:12 PM IST

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. இதில் அக்னிபாத், ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு உள்ளிட்டப் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன்(ஆகஸ்ட் 8) நிறைவடைந்தது. வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் முன்னதாகவே நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ’’தொடர்ந்து ஏழாவது முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தை கேலி செய்வதை நிறுத்துங்கள் என்றும்’’ தெரிவித்துள்ளார். ’’ நாடாளுமன்றத்தின் புனிதத்தைக் காப்பாற்ற போராடுவோம் என்றும், இந்த மாபெரும் சமூக நிறுவனத்தை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குஜராத் ஜிம்கானாவாக மாற்றுவதைத் தடுப்போம்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இரு அவைகளும் ஒத்திவைப்பு - தொடரும் எதிர்கட்சிகளின் அமளி

ABOUT THE AUTHOR

...view details