டெல்லி: சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்குலினுக்கு 2 முறை சம்மன் அனுப்பினர். அவர் ஆஜர் ஆகாத நிலையில் 3ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி செப்.17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜர் ஆனார். அப்போது சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலினை அறிமுகப்படுத்தி வைத்த பிங்கி ராணியும் ஆஜரானார்.
சுகேஷ் சந்திரசேகர் பணமோசடி வழக்கு... நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2ஆவது விசாரணைக்கு ஆஜர்... - JACQUELINE FERNANDEZ
சுகேஷ் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு 2ஆவது நாள் விசாரணைக்கு ஆஜரானார்.
இருவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து செப் 19ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக ஜாக்குலினுக்கு போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இன்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜரானார். தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்தாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றன். ஏற்கனவே நடிகை நோரா ஃபதேஹியிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க:டெல்லி போலீஸ் முன் பாகுபலி நடிகை ஆஜர் - பண மோசடி வழக்கில் விசாரணை