டெல்லியில் கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, மதுபானங்களை நேரடியாக வீட்டிலேயே விநியோகம் செய்ய கடந்த ஜூன் 1 ஆம் தேதி டெல்லி அரசு அனுமதி அளித்தது.
இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்து மதுபானக் கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய முடியாது. எல்-13, எல்-14 வகை உரிமம் வைத்துள்ள கடை உரிமையாளர்கள் மட்டுமே தங்கள் கடைகளுக்கு மொபைல் செயலி, இணையதளம் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்ய முடியும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.