டெல்லி:தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங், இங்கிலாந்து, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. ஒரே வாரத்தில் பெரும்பாலான நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவில் நேற்று வரை ஆந்திரா, சண்டிகர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 41 பேருக்கு ஒமைக்ரான் தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.
விரைவில் ஒமைக்ரான் பேரலை
இதனிடையே ஒமைக்ரான் காரணமாக பிரிட்டனில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், "விரைவில் ஒமைக்ரான் பேரலை ஏற்படக்கூடும். இதற்கு எதிராக போடப்பட்ட 2 டோஸ் கரோனா தடுப்பூசிகளும் பயன் அளிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விரைவில் ஒமைக்ரான் பேரலை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?