டெல்லி : டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சிலர் பேரணி நடத்தினார்கள்.
இந்தப் பேரணியின்போது சிலர் ஒரு மதத்தினருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கோஷங்கள் எழுப்பியதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான காணொலிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில் டெல்லி காவலர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களின் பேரணியின்போது சிலர் உள்ளே புகுந்ததாக கூறப்படுகிறது.