தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இஸ்ரேல் தூதரகத்தில் நியமிக்கப்பட்ட தலைமைக் காவலர் மர்ம மரணம் - இஸ்ரேல் தூதரகத்தில் நியமிக்கப்பட்ட தலைமை காவலர்

டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தில் நியமிக்கப்பட்ட தலைமைக் காவலர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் தூதரகத்தில் நியமிக்கப்பட்ட தலைமை காவலர் மர்ம மரணம்
இஸ்ரேல் தூதரகத்தில் நியமிக்கப்பட்ட தலைமை காவலர் மர்ம மரணம்

By

Published : Jan 4, 2023, 10:05 PM IST

டெல்லி: தலைநகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட டெல்லி காவல்துறையின் தலைமைக் காவலர் அசோக் குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த துப்பாக்கியை போலீசார் மீட்டுள்ளனர். இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, வசந்த விஹாரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் குடியிருப்பு வளாகத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் தலைமைக் காவலர் இறந்து கிடந்தார். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், முதற்கட்ட விசாரணையில், தலைமைக் காவலர் வீட்டில் தகராறு இருப்பது தெரிய வந்துள்ளது.

இஸ்ரேல் தூதரகத்தின் சில அதிகாரிகள் வசிக்கும் வசந்த விஹார் பகுதியில் உள்ள ஒரு அறையில் காவலர் தனியாக வசித்து வந்தார். டிச.4-ம் தேதி காலை அவரது அறையில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்ததும் டெல்லி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, ​​அசோக்கின் அறையின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததைக் கண்டனர். டெல்லி போலீஸ் குழுவினர் அறையின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

வசந்த் விஹாரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், தென்மேற்கு மாவட்ட டிசிபி, முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாகத் தெரிகிறது என்றும், காவலர் அசோக் சில குடும்ப காரணங்களால் மனமுடைந்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் கூறினார். இந்த முழு விவகாரமும் டெல்லி போலீஸ் மற்றும் இஸ்ரேல் தூதரகத்துடன் தொடர்புடையது என்பதால், இந்த முழு சம்பவத்தையும் போலீசார் மிகவும் கவனமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆண் பயணி.. பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details