தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சிறுமி விவகாரம்- ராகுல் காந்தி மீது புகார்!

டெல்லி சிறுமி பாலியல் வன்புணர்வு கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Aug 5, 2021, 8:39 PM IST

Updated : Aug 5, 2021, 8:51 PM IST

டெல்லி: டெல்லி சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை கோரி டெல்லியை சேர்ந்த வழக்குரைஞர் வீனித் ஜிண்டால் (Vineet Jindal) போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் தொடர்பான புகைப்படங்களை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். ஆகவே அவர் மீது போக்சோ மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

டெல்லி தலித் சிறுமி வன்புணர்வு கொலை- நியாயமான விசாரணை தேவை- பாஜக!

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) 9 வயதான பட்டியலின சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதில் மதகுரு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்

அப்போது, “சிறுமிக்கு நீதி கிடைக்க நாடே உங்கள் பின்னால் நிற்கும்” என உறுதியளித்தார்.

இதையும் படிங்க : பாலியல் வன்கொடுமையின் மையப்புள்ளி டெல்லி- காங்கிரஸ் கடும் தாக்கு!

Last Updated : Aug 5, 2021, 8:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details