தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளி மாணவி கத்தியால் குத்தி கொடூர கொலை.. தலைமறைவு இளைஞர் கைது! - டெல்லி சிறுமி கொலை

தலைநகர் டெல்லியில் பொது வெளியில் 16 வயது சிறுமி 20 முறை கத்தியால் குத்தப்பட்டும், தலையில் கல்லால் தாக்கப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Delhi
Delhi

By

Published : May 29, 2023, 3:43 PM IST

Updated : May 29, 2023, 5:47 PM IST

Delhi Girl Killed by her Boy Friend

டெல்லி :காதல் தகராறில் பள்ளி மாணவியை பலமுறை கத்தியால் குத்தியும், தலையில் கல்லால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமேற்கு டெல்லியின் ஷகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவருவரும் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது நண்பரது மகன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சிறுமி சென்று உள்ளார்.

அப்போது நண்பரின் வீடு இருக்கும் பகுதியில் நின்று கொண்டு இருந்த சிறுமியை நோக்கி வந்த இளைஞர், காரசார விவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமி மீது இளைஞர் சரமாரியாக குத்தி உள்ளார்.

சிறுமியின் தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக இளைஞர் குத்தியதில், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். தொடர்ந்து கீழே கிடந்ஹ்டப் கல்லை எடுத்த இளைஞர் அதை சிறுமியின் தலையில் பலமாக பலமுறை தாக்கி உள்ளார். இந்த கோர சம்பவத்தை பார்த்த அருகில் இருந்த அனைவரும் தடுக்க முயற்சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சிறுமியின் தலையில் கல்லை போட்டு தொடர்ந்து தாக்கிய இளைஞர், ஒருவழியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து உள்ளார். சிறிது தூரம் சென்ற இளைஞர் மீண்டும் வந்து சிறுமியின் தலையில் மீண்டும் கல்லால் தாக்கி உள்ளார். இதைக் கண்ட அருகில் இருந்த மக்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்தைவிட்டு இளைஞர் சென்ற நிலையில், இது குறித்து போலீசாருக்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் அளித்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து சிறுமியின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து 16 வயது சிறுமியின் சடலம் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டனர். சிசிடிவியில் சிறுமியை சந்தித்த இளைஞர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியை சரமாரியாக குத்தியது உள்ளிட்ட நிகழ்வுகள் பதிவாகி இருந்தது

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் ஷகில் என்பதை அடையாளம் கண்ட போலீசார், தலைமறைவான இளைஞரை தேடி வந்தனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட இளைஞர் குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி மெக்கானிக் என்பது தெரியவந்ததாகவும், இளைஞர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. என்ன காரணத்திற்காக சிறுமி கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார் என அறியப்படாத நிலையில், பொது வெளியில் வைத்து கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :14 செல்போன், 43 சிம்கார்டுகள்.. கலால் ஊழல் விவகாரத்தில் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை பரபர்ப்பு தகவல்!

Last Updated : May 29, 2023, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details