தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தங்கையை ஈவ்-டீசிங் செய்தவரை கண்டித்த அண்ணன் கொலை - டெல்லி காவல்துறை

டெல்லியில் தனது தங்கையை ஈவ்-டீசிங் செய்த அண்ணனை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கையை ஈவ்-டீசிங் செய்தவரை கண்டித்த அண்ணன் கொலை
தங்கையை ஈவ்-டீசிங் செய்தவரை கண்டித்த அண்ணன் கொலை

By

Published : Oct 31, 2022, 9:04 AM IST

டெல்லியின் படேல் நகர் பகுதியில், வெள்ளிக்கிழமை (அக் 28) இளஞ்சிறார் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் தாக்கப்பட்டிருப்பதாக படேல் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இளஞ்சிறாரை மீட்டு சர்தார் படேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தவர் மனோஜ் குமார் நேகி என்பது தெரிய வந்தது. மேலும் மனோஜ், தனது தங்கையை சிலர் ஈவ்-டீசிங் செய்ததற்காக அவர்களை எச்சரித்து அறைந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பழிவாங்கும் நோக்கத்தில் மனோஜை கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று (அக் 30) இரண்டு இளைஞர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காதலனை விஷம் வைத்துக்கொன்ற காதலி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details