டெல்லி:இந்துக் கடவுள்கள் குறித்த அருவருக்கத்தக்க, ஆட்சேபகரமான பதிவை நீக்கக் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவை இது குறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.
சில இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்துக் கடவுள்கள், தெய்வங்கள் குறித்து முன்வைத்த 'அருவருப்பான', 'ஆட்சேபகரமான' இடுகைகளை நீக்க வலியுறுத்தி வழக்கறிஞர் ஆதித்யா சிங் தேஷ்வால் மனு தாக்கல்செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரேகா பல்லி, இது குறித்து அடுத்த விசாரணையின்போது (ஆகஸ்ட் 16) இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஜி. துஷார் ராவ், இன்ஸ்டாகிராம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 ஐ அதன் உண்மையான அர்த்தத்தில் பின்பற்றத் தவறிவிட்டது என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.