தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த உத்தரவு - பணப்பலன்

டெல்லியில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

delhi
delhi

By

Published : Oct 12, 2022, 10:29 PM IST

டெல்லி:டெல்லியில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அன்ஸ்கில்டு வொர்க்கர்ஸ்-ன் குறைந்தபட்ச ஊதியம் 16,506 ரூபாயிலிருந்து, 16,792 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

செமி ஸ்கில்டு வொர்க்கர்ஸ்-ன் குறைந்தபட்ச ஊதியம் 18,187 ரூபாயிலிருந்து 18,499 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்கில்டு வொர்க்கர்ஸ்-ன் குறைந்தபட்ச ஊதியம் 20,019 ரூபாயிலிருந்து 20,357 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நான் மெட்ரிக்குலேட்டட் (Non-matriculated) ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், 18,187 ரூபாயிலிருந்து 18,499 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மெட்ரிக்குலேட்டட் (matriculated) ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், 20,019 ரூபாயிலிருந்து 20,357 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பட்டதாரி மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 21,756 ரூபாயிலிருந்து 22,146 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படியை சேர்த்து இந்த குறைந்தபட்ச ஊதியத்தை டெல்லி அரசு உயர்த்தியுள்ளது.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும்பாலான ஊழியர்கள் பலனடைவார்கள் என்றும் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

பிற மாநிலங்களைவிட டெல்லியில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் மிகவும் அதிகம் என்றும், அனைத்து தொழிலாளர்களும் பயனடையும் வகையில், 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படியை டெல்லி அரசு உயர்த்தி வருவதாகவும் சிசோடியா தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொழில்நுட்பமும் திறமையும் இந்தியாவின் வளர்ச்சி தூண்களாகும் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details