டெல்லி மாநிலத்தில் வரும் மே 31ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தால், அதற்குப் பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(மே.23) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முழு ஊரடங்கு ஒருவாரம் நீட்டிப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் முழு ஊரடங்கு உத்தரவு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(மே.23) தெரிவித்துள்ளார்.
Lockdown in Delhi
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ’கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டதாக 1,600 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதால், நேர்மறை விகிதம் 2.5 விழுக்காடாக குறைந்துவிட்டது. அதனால் வரும் மே 31ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்று பாதிக்கப்படும் வழக்குகள் குறைந்தால் ஊரடங்கிற்குப் பிறகு ஒரு சில தளர்வுகள் வழங்கப்படும்' என்றார்.