தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Brij Bhushan singh: மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்.. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக எம்.பி மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

v
Brij Bhushan Singh

By

Published : Jul 18, 2023, 2:58 PM IST

Updated : Jul 18, 2023, 3:17 PM IST

டெல்லி :மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக எம்.பி மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஜந்த மந்தரில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்திய போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னாள் மற்றும் தற்போதைய விளையாட்டு வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு விழாவில் முன்னிட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற வீரர், வீராங்கனைகளுக்கும் டெல்லி போலீருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற வீரர், வீராங்கனைகளை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போட்டிகளில் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச உள்ளதாக வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர். விவசாய சங்கங்களின் தலையீட்டை அடுத்து வீரர், வீராங்கனைகளின் முடிவு கைவிடப்பட்டது.

பாலியல் புகார் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே கடந்த ஜூலை 7ஆம், தேதி பிரிஜ் பூஷன் சிங் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் வினோத் தோமர் உள்ளிட்டோர் மீது டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

டெல்லி போலீசாரின் குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பிரிஜ் பூஷனுக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் வினோத் தோமர் இருவரும் வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், பாலியல் தொல்லை புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் வினோத் தோமருக்கும் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருவரும் தலா 25ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையாக நீதிமன்றத்தின் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க :Oommen Chandy: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்

Last Updated : Jul 18, 2023, 3:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details