டெல்லி: வாரணாசி ஞானவாபி மசூதியில் அண்மையில் நடத்தப்பட்ட கள ஆய்வில், சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக, டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான இந்து கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றும் ரத்தன் லால் என்பவர், தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்து சிவலிங்கத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாகவும், இது மத உணர்வை புண்படுத்துவதாகவும் கூறி, அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரத்தன் லாலை நேற்று கைது செய்தனர்.