2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் கரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது, கரோனா தொற்றின் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வரும் சூழ்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகள் வகுப்பு வாரியாக பிரித்து நடத்தப்படவுள்ளன.
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படாத நிலையில், பள்ளிகள் அவசரமாக அவசரமாக திறக்கப்படுவதற்கு மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளியில் கரோனா பரவும் வாய்ப்பு அதிகம்
இந்நிலையில்இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத் விக், "குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள கற்கும் சூழல் குறித்து பேசும் நாம், நம் அபாயங்களையும் பார்க்க வேண்டும். நன்மை தீமைகளை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.