டெல்லி : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னதாக கடந்த 4ஆம் தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய அவர் நிவாரண உதவிகள் செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் பாலியல் வன்புணர்வு கொலையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கும்.
இந்த விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட சிறந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடுவார்கள். டெல்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையின் மையப்புள்ளி டெல்லி- காங்கிரஸ்
டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் ஆக.1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பின்னர் சிறுமியை யாருக்கும் தெரியாமல் ஓல்டு நங்கல் பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரிக்க முயன்றனர். அப்போது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
சம்பவத்தன்று சிறுமி சுடுகாட்டில் உள்ள கூலிங் இயந்திரத்தில் குளிர்ந்த நீர் பிடிக்க சென்றுள்ளார். இந்நிலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது சிறுமி மின்சாரம் பாய்ந்து மரணித்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.
ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய மனு!
மேலும், இது வெளியே தெரிந்தால் சிறுமியின் உடல் பாகங்களை திருடி விடுவார்கள் என்று பயமுறுத்தி உடலை அங்கேயே தகனம் செய்ய முயற்சித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மதச் சடங்கு செய்பவர் உள்பட மூவர் மீது காவலர்கள் கொலை, பாலியல் வன்புணர்வு, போக்சோ சட்டம் மற்றும் பட்டியலின- பழங்குடியின வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லி தலித் சிறுமி வன்புணர்வு கொலை- நியாயமான விசாரணை தேவை- பாஜக!