தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"இந்தியாவை பற்றி ஒபாமாவுக்கு என்ன தெரியும்..." மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் தாக்கு! - Defence Minister Rajnath Singh

இந்தியாவில் சிறுபான்மையின மக்களின் உரிமை குறித்து பேசும் ஒபாமா, அமெரிக்க அதிபர் அவர் இருந்த காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை மறக்க கூடாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Obama
Obama

By

Published : Jun 26, 2023, 8:02 PM IST

டெல்லி : இந்தியாவில் சிறுபான்மையின மக்களின் உரிமை குறித்து பேசும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய மக்களை முதன்மையாக கொண்ட நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மறக்கக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உலகம் முழுவதும் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் குடும்பமாக கருதும் ஒரே நாடு இந்தியா என்பதை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மறந்து விடக் கூடாது என்று தெரிவித்தார்.

இந்திய மக்கள் வசுதைவ குடும்பம் என்ற ஒரு நாடு ஒரு குடும்பம் என்ற கருத்தை நம்புகிறார்கள் என்பதையும், அனைத்து மக்களையும் ஒரு உலகளாவிய குடும்பத்தின் உறுப்பினர்களாக கருதுவதையும் ஒபாமா தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது எத்தனை இஸ்லாமிய நாடுகளில் தாக்குதல் நடத்தினார் என்பதையும் அவர் சிந்திக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்வதால் இந்தியா மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டுள்ளதாகவும் முஸ்லீம் நாடுகளில் கூட 72 பிரிவுகள் காணப்படாத நிலையில், இந்தியாவில் மட்டும் அனைவரும் காண முடியும் என ஒபாமாவிடம் நம்பிக்கையுடன் சொல்ல விரும்புவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் 3 நாட்கள் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் இடையே ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, "இந்தியாவில் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படா விட்டால், ஒரு கட்டத்தில் நாடு பிளவுபடுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இந்தியாவில் நிலவும் மனித உரிமைகள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புமாறு அமெரிக்க அதிபர் பைடனை வலியுறுத்துவதாக" ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் கருத்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. நாட்டில் பல்வேறு அமைப்பினர் ஒபாமாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலக் கட்டத்தில் இஸ்லாமியர்களை முதன்மையாக கொண்ட 6 நாடுகள் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க :அந்தரங்க உறுப்பை தாக்கினால் கொலை முயற்சியா? கர்நாடக உயர் நீதிமன்றம் திடுக் தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details