உத்தரபிரதேசமாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டம் நிகாசன் பகுதியில் ஒரு கிராமம் உள்ளது. இதன் அருகில் உள்ள ஒரு மரத்தில் இரண்டு சகோதரிகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். 14 மற்றும் 17 வயது சகோதரிகளின் இந்த நிலையைக் கண்ட சிறுமிகளின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இதனால் அங்கு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேநேரம், ‘மதியம் 3 மணியளவில் பைக்கில் வந்த மூன்று பேர் சிறுமிகளை கடத்திச் சென்றனர். மேலும் அவர்கள் (சிறுமிகள்) பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்” என சிறுமிகளின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து நிகாசன் பகுதி காவல்துறையினர் கூறுகையில், "மாவட்டத்தின் மூத்த காவலர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும், நிகாசன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விதிமுறைகளின்படி உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தன். இந்த அறிக்கையின் அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
அதேபோல் காவல் ஆய்வாளர் கூறுகையில் “சிறுமிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்படும் வரை அவர்களது குடும்பத்தினர் எந்த புகாரும் அளிக்கவில்லை. இறப்புக்கான காரணத்தை அறிய உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.
அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், தற்கொலைக்கான வாய்ப்பையும் நாங்கள் நிராகரிக்க முடியாது” என்றார்.
மேலும் லக்னோ ஐஜி இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், "சிறுமிகள் அவர்களது துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். அவர்களின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை.