தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தும்காவில் 15 வயது பழங்குடியின சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணை! - போலீசார் விசாரணை

தும்கா மாவட்டத்தில் கடந்த வாரம் மாயமான 15 வயது பழங்குடியின சிறுமி, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தும்காவில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

Dead
Dead

By

Published : Oct 12, 2022, 7:19 PM IST

தும்கா: ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் அம்காச்சி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பழங்குடியின சிறுமி, ஷிகாரிபாடாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். துர்கா பூஜை விடுமுறையின்போது சிறுமி, பத்தல்லாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு கடந்த 7ஆம் தேதி உறவினர் வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. ஆனால், அதன் பிறகு சிறுமியை காணவில்லை. சிறுமியை பெற்றோர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று(அக்.12) சிறுமி பத்தல்லாவில் உள்ள மரத்தில் சடலமாக தொங்கியதைக் கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அழுகிய நிலையில் இருந்த சிறுமியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தும்காவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில், தும்கா மாவட்டத்தின் முஃபாசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷ்ரியம்தா கிராமத்தில், 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு, மரத்தில் சடலமாக தொங்கவிடப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

இதேபோல், தும்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி, காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தும்கா மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் இதுபோல நான்கு சம்பவங்கள் நடந்துள்ளன.

இதையும் படிங்க: பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details