புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சினை, 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அவசர கால பயன்பாட்டுக்காக செலுத்த, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (DCGI) ஒப்புதல் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பாரத் பயோடெக் 2-18 வயதிற்குள்பட்டவர்களுக்களின் COVAXIN (BBV152) கான மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பிடம் (CDSCO) சமர்ப்பித்தது.