அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலக கட்டடங்களின் மீதும் தேசியக் கொடியை ஏற்றுமாறு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் துணை ஆணையர் அனந்த்நாக் பியூஷ் சிங்லா உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்ற உத்தரவு! - உத்தரவு
ஜம்மு காஷ்மீர் யூனியனில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கட்டடங்களில் 15 நாள்களுக்குள் தேசியக் கொடி ஏற்றுவதை அனைத்து மாவட்ட மற்றும் துறைத் தலைவர்கள் மற்றும் தொகுதி மட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பான தினசரி தகவல்களை மாவட்ட ஆட்சியர்கள் சமர்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தேசியக் கொடி இந்தியர்களின் நம்பிக்கையையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கிறது, இது தேசிய பெருமையின் அடையாளம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.